ஆசை இருக்கு அரசாள.. அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட… இது மேல் என்று சொல்லும் அளவுக்கு மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல்.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகளவில் உருவாகி வரும் ஆட்டுப்பண்ணைகளே அதற்கு சாட்சி! அவர்களில் ஒருவராக.. நிறைவான லாபம் பார்த்து வருகிறார், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜன். இளங்கலை வணிகவியல் பட்டதாரியான இவர், புகைப்பட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.கைகொடுத்த மூலிகை வைத்தியம்!