மானாவாரி மற்றும் புஞ்சை நிலப்பகுதிகளில் பருவ காலங்களில் பெய்யும் மழையைச் சேமித்து சரியான முறையில் பயன்படுத்துவதே மானாவாரியில் வெற்றிகரமாக பயிர் செய்யும் முறையாகும். பெய்யும் மழை நீரை நீர்வளப் பாதுகாப்பு முறைகளான நீர் அறுவடை, நீர் சேமிப்பு மற்றும் நீர்மேலாண்மை உத்திகள் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்துதல் அவசியமான ஒன்றாகும். இதனால் விவசாயத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பெருகும். விவசாயிகளின் வருமானம் உயரும். நிலத்தில் மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்வளம் பெருகும், நீர் வளம் அதிகரிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.