அறிவார்ந்த சிந்தனைகள், ஆழ்ந்த த்ததுவங்கள் ஆகியனவும் கூட, கலை இலக்கியம் என்னும் ஊர்த்தியில் ஏறி ஊர்வலம் செல்லும்போது, எவர் ஒருவரையும் எளிதில் கவர்ந்துவிடும். சமூக அக்கறையுள்ள இலக்கியப் படைப்புகள், சமூகத்தை எதிரொலிக்கும் கண்ணாடியாக மட்டுமின்றி, சமூகத்தைப் புரட்டிப்போடும் நெம்புகோலாகவும் இருந்துள்ளன. எல்லைகளைத் தாண்டி எல்லா மொழி இலக்கியங்களுக்கும் இது பொருந்தும்.