சனாதனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் இணைத்து மதவாத வெறுப்பு அரசியலை இந்தியா முழுக்கக் கட்டமைக்கப் பல்வேறு வழிமுறைகளை ஒன்றிய பாஜக ஆளும் அரசுகள் முன்னெடுக்கும் சூழலில் அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கிறது '' புல்டோசர் அரசியல் '' எனும் இந்நூல். திராவிட இயக்கம் மீது முன்வைக்கப்படும் தவறான பொய்யான புனைச் சுருட்டுகளைத் தகர்த்தெறியும் கருத்தியலாக புல்டோசர் அரசியர் நூலினை ஆசிரியர் சாரதா தேவி அவர்கள் நமக்குத் தந்துள்ளார்கள்.