இந்த ஒரு நிமிடச் செய்தியைத் தொடர்ந்து கேட்டு வருகின்றவர்களில் ஒருவரான, என் அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய திரைப்படத் தயாரிப்பாளர் கலைபுலி தாணு அவர்கள், 500 செய்திகளைக் கொண்ட தொகுதிகளாக, நூலி வடிவில் இதனை மாற்ற வேண்டும் என்றும், நூலாக்கச் செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். ஆம், இந்த நூல் கலைப்புலியின் கனிவு! செய்திகள் என் குரல் வழியே முதலில் ஒலியாகி, பிறகு படமாகி, இன்று எழுத்தாகி - இப்போது உங்களை வந்து சேர்த்திருக்கிறது!