வாழ்வில், ஏதேனும் ஒருநல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் நம்
வீட்டில் சொல்லும் விஷயம்... ‘திருஷ்டி சுத்திப் போடுங்க...’ என்பதுதான்! சிந்தனைகளின், கெட்ட எண்ணங்களின் தாக்குதல்தான்
கண் திருஷ்டி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதை கண்ணேறு என்றும் சொல்லுவார்கள். ஒருவர் எதிர்பார்த்தது மற்றவர்களுக்குக் கிடைக்கும்போதோ, அல்லது ஒருவருக்கு
ஏதேனும் நல்லது நடக்கும்போதோ... அதனால் மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை
என்றெல்லாம் உண்டாகும். இதுவே பொருமல். இதனால் ஏற்படுவதே கண் திருஷ்டி. இந்த தீய எண்ணம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. இதனால்தான் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொல்லிவைத்தார்கள். நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டியோ தோஷங்களோ
ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்வுகள் மூலமும் சில அறிகுறிகள் மூலமும்
தெரிந்து கொள்ளலாம்.திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது
பிரச்சினைகள், தடைகள், சோகங்கள், சண்டை சச்சரவுகள், பிரிவுகள், நஷ்டம்,
பொருள் இழப்பு என ஏதேனும் ஒன்று வரிசையாக வந்துகொண்டே இருக்கும்.