வீ. செல்வராஜ் பதினேழு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவற்றில், ஆறு புத்தகங்கள், 1988- 1998 ஆம் ஆண்டுவரை, அந்தந்த ஆண்டுகளில் பிற எழுத்தாளர்கள் எழுதிய மிகச் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, டாக்டர். இரா. தண்டாயுதம் நினைவிலக்கியப் பேரவையின் கீழ் 'மலேசியத் தமிழ் இலக்கியம்' என்ற நூலாக்கி வெளியிட்டிருக்கிறார். இதில் சிறுகதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், நாவல்கள் இடம் பெற்றுள்ளன.