ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இறைவன் படைத்த 27 நட்சத்திர
தேவியர் அனைவருமே புனிதமானவர்கள். மக்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற
அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள், மூர்த்தி, தீர்த்தம், தலங்களை முறையாக
தரிசித்து அந்த பூஜா பலன்களை எல்லாம் நம்முடைய முன்னேற்றத்திற்காக
அர்ப்பணிப்பவர்கள். சுயநலம் ஒரு சிறிதும் அற்ற உத்தம தெய்வங்களே நட்சத்திர
தேவியர் என்பதை உணர்ந்தால் உங்கள் கேள்விக்குரிய பதிலை நீங்களே உணர்ந்து
கொள்வீர்கள். 63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்கள், சித்தர்கள், மகான்கள்,
யோகிகள், உத்தம மனிதர்கள் எல்லா நட்சத்திரங்களிலும் பிறந்திருக்கிறார்கள்.
அவர்கள் விரும்பியிருந்தால் நல்ல நட்சத்திரங்கள் என்று நீங்கள் நினைக்கும்
நட்சத்திரங்களில் மட்டும் பிறந்திருக்கலாமே? இதை யோசித்துப் பார்த்தீர்களா?