book

சர்வம் சிவ சக்தி மயம்

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :480
பதிப்பு :3
Published on :2011
Out of Stock
Add to Alert List

சங்கர நாராயண வடிவத்தையும் அர்த்த நாரீசுவர வடிவத்தையும் பார்த்தால் இந்த உண்மை தெரியும். இரண்டிலும் வலப்பக்கம் பரமேசுவரனுடையது. ஒன்றிலே இடப் பக்கம் விஷ்ணு; இன்னொன்றில் அதே இடது புறம் அம்பாளுடையது.இருக்கிற ஒன்றே ஒன்றை, இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு. அதாவது ஜகத் முழுவதும் விஷ்ணு ஸ்வரூபம். ‘விச்வம் விஷ்ணு:' என்றுதான் சஹஸ்ரநாமம் ஆரம்பிக்கிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்கிற வாக்கும் இருக்கிறது.உலக பரிபாலனம் விஷ்ணுக்குறியது என்று சொல்கிறோம். உலகத்திலே இருக்கிற ஆனந்தங்களை, உணர்ச்சிகளை எல்லாம் தெய்விகமாக்குகிற பக்தி மார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் தோன்றுகிறது.