book

கேப்டன் மகள்

captain Magal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. தர்மராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413839
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Out of Stock
Add to Alert List

கேப்டன் மகள் ; உலக இலக்கிய மேதை பூஷ்கின் கடைசியாக ழுதிய ' காப்டன் மகள் '(1836)என்ற நாவல் அவருடைய கலைத்திறனை மிக நன்றாக எடுத்துக்காட்டுகிறது. யெமெல்யான்புகச்சோவ் தலைமை தாங்கிய வலிமையான விவசாயிகள் எழுச்சியைப் பின்னணியாக்க்கொண்டிருக்கும் இந்த  நாவலில் புகச்சோவ்  இயக்கத்தின் வெகுஜனத்தன்மை, பண்ணையடிமை
முறை எதிர்ப்பு முதலியன சுட்டிக்காட்டப்படுகின்றன. பூஷ்கின் புகச்சோவின் அறிவு, மதிநுட்பம்,வீரம், மனிதாபிமானம் ஆகியவற்றை வர்ணித்து அவரை வீரமும் திறமையும் கொண்டதலைவராகச் சித்திரிக்கிறார். மாபெரும் ருஷ்ய விமரிசகரான விஸரியோன் பெலீன்ஸ்கி'பூஷ்கின் படைத்த 'காப்டன் மகள்' நாவலில் பல பகுதிகள் துல்லியமாக, உண்மையாக, கலாபூர்வமாக இருப்பதனால் பூரணத்தை எட்டுகின்ற அதியசத்தை நிறைவேற்றுகின்றன' என்றுபாராட்டியுள்ளார்.

நிக்கலாய் கோகல் 'ருஷ்ய உரைநடை இலக்கியங்களில் தலைசிறந்த ;காப்டன் மகள்'நாவலில்தூய்மையும் இயல்பான தன்மையும் மிகவும் அதிகமான அளவில் இருப்பதால் இதோடுஒப்பிடும்போழுது எதார்த்தமே செயற்கையானதாக,கேலிச்சித்திரமாகத் தோன்றும் அளவில்ருஷ்யக் கதாபாத்திறங்கள் உயிர் பெற்று நடமாடுகின்றன என்றும், நம்மை நம்மிடமிருந்து எடுத்து அதிக தூய்மையான, இன்னும் சிறப்பான வடிவத்தில் நம்மிடம் திருப்பிக் கொடுக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும்' என்றும் பாராட்டியுள்ளார்.

                                                                                                                                                      -பதிப்பகத்தார்