book

வெள்ளாவி

Vellavi

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Vimal Kuzhanthaivel
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

நீண்ட நெடுந்தொலைவு போய் புலம்பெயரியாய் ஐக்கிய இராச்சியத்தில் வதியும் விமலின் ஆன்மா இரவுக்காட்சி படம் பார்த்துவிட்டு சாறனை தூக்கிக் கட்டியபடியும் கோவில் சுவர்களில் குந்தியிருந்து ஊர்ப்புதினங்களைப் பேசியும், எழுவட்டுவான் மைதானத்தில் உதைபந்து விளையாட்டுக்குப் பிறகான மிகுமாலை அமைதியில் இஞ்சிப் பிளோன்டியொன்றின் உசாரில் காலை நீட்டி உட்கார்ந்து வியர்வை காய்ந்து பனிபெய்து நனைக்கும் வரைக்கும் பகிடி பேசிச் சிரித்தாயும், கோளாவில் மணல் தெருக்களில் சைக்கிளையும், துயரம் நொறுக்கும் வாழ்வையும் தள்ளியபடியும் இழந்த வாழ்வின் சாரங்களை இன்றும் சுவைத்துக் கொண்டிருக்கின்றது. இறந்த வாழ்வின் மகோன்னதத் தருணங்களை, திரும்பவொருத்தரம் நமக்கு வாய்க்க வைத்திருக்கிறார் விமல்.