book

அறிந்தவைகளுக்கு அப்பால்

Arinthavaikalukku Appal

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :304
பதிப்பு :3
Published on :2014
ISBN :9789388450867
Add to Cart

இந்த நூற்றாண்டில் அவதரித்த, சந்தேகமில்லாமல் மிகவும் சர்ச்சைக்குள்ளான மனிதர் ஓஷோ. பல சுதந்திரமடைந்த (free) நாட்டு அரசாங்கங்கள், இந்த ஞானமடைந்த குருவை வேட்டையாடி கொல்ல முயன்றார்கள். ஆனால், அது போனிக்ஸ் (PHOENIX) பறவையைப் போல், மீண்டும் அவர் உயிர்த்தெழவே வழிவகுத்திருக்கும். உண்மையை எப்படி ஒருவரால் அடக்க முடியும்?
இந்த புத்தகத்தில், ஓஷோ, பம்பாயில் 1970-1973 இல்பேசிய 6 பிரசங்கங்கள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும், அதனுடைய எல்லையற்ற தன்மையைப்பற்றியும் ஓஷோ மிகவும் புதிய - முறையில் விளக்கியிருக்கிறார். அந்த மறைபொருளான ஆன்மிக ரகசியத்தை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில், தனக்கே உரித்தான எளிய நடையில் விளக்கியிருக்கிறார்.நான் படித்த இந்த ஒரே புத்தகத்தில்தான், அவர் தன்னுடைய முந்தைய பிறவியைப்பற்றி அழகாகத் தொகுத்துப் பேசியிருக்கிறார். காலத்திற்கும், தன்னுடைய முந்தைய பிறவிகளுக்கும் மற்றும் இந்தப் பிறவியில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் உள்ள சம்மந்தத்தைப் பற்றி அவர் விளக்கியிருக்கிறார். அதைப்போல இறப்பின் நிகழ்வைப்பற்றியும், திபேத்தியன் போர்டோ ( TIBETAN BORDO) மற்றும் மறுபிறவி பற்றியும், அவர் விளக்கமாகக் கூறியிருக்கிறார். அது சாதாரண அறிவுப்பூர்வமான கற்பனையோ அல்லது ஆதார மற்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்ததோ அல்ல. அவைகள் அனைத்தும், அவருடைய தனிப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடு.