வெற்றி தரும் உரையாடல் கலை
Vetri Tharum Uraiyadal Kalai
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுந்தரசீனிவாசன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190730815
Add to Cartபறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பேசும் இயல்பு அமைந்திருந்தால் மனிதர்களைவிடவும் நல்ல தன்மையாகப் பேசியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் மனிதன் ஒவ்வொரு நாளும் முக்கால் பகுதியைப் பிறர் குறை பேசுவதிலேயே செலவிடுகிறான் அல்லது காதுக்களுக்குள் வானொலிக் கருவிமுனைகளைச் செருகிக்கொண்டு யாருடனும் பேசிக்கொள்ளாமல் போய்க்கொண்டிருக்கிறான். ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் அணுகுமுறை குறைந்துகொண்டே போகிறது. வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பலரைப் பேசவிடாமல் வாயைப் பூட்டிவிட்டன. இதயம் திறந்து ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளாமல் எந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவருடன் ஒருவர் சற்று நேரம் மனம் திறந்து பேசலாம் என்று நினைத்தால் அந்த நேரத்தில் செல்போன் அழைப்புகள் அடிக்கடி வந்து பேச்சைத் தொடரவிடாமல் துண்டிக்கின்றன.
அறிவு வளர்ச்சிக்கு, மனத்தெளிவுக்கு உரையாடல் மிகவும் அவசியமானது. உரையாடல் மூலம் மன இறுக்கம் கரைந்திட வாய்ப்பு ஏற்படும். இந்நூலில் உரையாடல் மூலம் வெற்றிபெறும் பலை கற்றுத் தரப்படுகிறது. எழுத்தாளர் எஸ். சுந்தரிசீனிவாசன் அவர்கள் உரையாடல் அணுகுமுறைகளை மிகவும் நுணுக்கமாக விளக்குகிறார். பிறரை ஈர்க்கும் வண்ணம் பேசும் நுட்பங்கள் நூலில் தெளவுபடுத்தப்படுகின்றன. ஒருவருடன் எப்படித் தொடர்வது, முட்டுக்கட்டைகளை எப்படிஅகற்றுவது பொன்ற பல விவரங்கள் விளக்கப்படுகின்றன. வாதிடும் திறனை வளர்த்துக்கொள்ளும் முறை, காரியம் கைகூட உரையாடல் கையாளும் முறை, உரையாடல் மேம்பட வள்ளுவர் காட்டும் வழிகள் ஆகியவை ஆய்ந்துரைக்கப்பட்டுள்ளன.