book

தேயிலைக் கொழுந்து

Theyilai Kolunthu

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஆர். ரவீந்திரன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :258
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380130002
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை
Add to Cart

தரையிலிருந்து மலையைப் பார்ப்பதும்,

மலையிலிருந்து தரையைப் பார்ப்பதும்,

மலையிலுருந்து வானத்தைப் பார்ப்பதும்,

வேறுவேறான காட்சிகளைக் காண் வாய்ப்பளிக்கின்ற ஒரு செயல்.

பசுமையில் கணக்கில் அடங்காத தோற்றங்களை ஒவ்வொரு கணத்திற்கும் ஒரு பொருள் இருப்பதை ஒவ்வொருவருமே உணரமுடியும். மலைகள் எத்தனை அற்பதுங்களுக்குக் காரணமாகின்றன. பறவைகள், விலங்குகள் நடுவே மனிதர்கள். மனிதர்களைத் தவிர மற்றவை மலைகளோடு நேசமுடையவை.

மனிதர்களுக்கு உழைத்து உயிர்வாழ வேண்டிய நிலை. அதனால் இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையில் எப்போதும் ஒரு தொடர் போராட்டம். மனிதனுக்கு இயற்கையிலிருந்து எடுத்துக்கொள்ளத் தணியாத ஆசை. மனிதனின் ஆற்றல் எதிர் கொள்ள வேண்டியவை எப்போதுமே இருந்துவருகின்றன.

மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டத்தில் அவன் தன்னை இந்தக் கோளத்தில் எப்படி நிலை நிறுத்திக் கொள்ளப்போகிறான்? இது நமக்குள் எழும் கேள்வி.