book

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6

Hindu Maha Samuthiram Part 6

₹199.5₹210 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :200
பதிப்பு :3
Published on :2013
Add to Cart

இந்நூலாசிரியர், சோ அவர்கள் ஹிந்து மத சாஸ்திரங்களிலும், சம்பிரதாயங்களிலும் தீவிர நம்பிக்கை கொண்டவர்.இப்படி இருந்தாலும், மற்ற மத நம்பிக்கைகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பவர். இந்தத் தொடரில் இவர், ஹிந்து மத மேன்மையைப் பற்றி, தான் படித்து உணர்ந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இவர் முதலில் வியாச பாரதத்தை எழுதிய போது, வாசகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. காரணம் இவருடைய எளிமையான நடையும், நேர்மையான பார்வையும்தான்! அதே பாணியில் வால்மீகி ராமாயணத்தையும் எழுதினார். அதற்கும் அமோக வரவேற்பு! அதன் பிறகு, ஹிந்து மஹா சமுத்திரம் எனும் இத்தொடரை எழுத முற்பட்டார். இவை இப்போது ஆறு தொகுதிகள் வரை வெளிவந்துள்ளன. கடலின் நீளத்தையும், அகலத்தையும், ஆழத்தையும் நம்மால் அளவிட முடியாது. அதே போல்தான் ஹிந்து மதத்திலுள்ள விஷயங்களை முழுவதுமாக கற்றுணர, பல ஜென்மங்கள் பிறப்பெடுத்து முற்பட்டாலும் இயலாத காரியம்! அதனால்தான் இந்தத் தொடருக்கே இவர், ஹிந்து மஹா சமுத்திரம் என்று பெயரிட்டுள்ளார். ஹிந்து மதம் பெயர் வந்த விவரத்திலிருந்து தொடங்கி, யாகங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், ஸ்ரீமத் பாகவதம், இதிஹாசங்கள், பகவத் கீதை, ஆச்சார்யர்கள், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், ஆழ்வார்கள் வரலாறு, சித்தர்கள் வரலாறு, ரிஷிகள், ஞானிகள், மஹான்கள் என இன்னும் ஏராளமான தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். இந்த நூலைப் படித்தால், ஹிந்து மதத்தைப் பற்றி ஓரளவாவது நாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஹிந்து தர்மம் தொடக்கமும் நிறைவும் அற்றது.