book

வால் பையன்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. சேகர்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :110
பதிப்பு :2
Published on :2015
Add to Cart

எஸ்.வி.சேகர். சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ்.வி.சேகர். திரு.எஸ்.வி.வெங்கட்ராமன், திருமதி அலமேலு வெங்கட்ராமன் தம்பதியின் மூத்த மகன். சுசிலா சேதுராமன், ராஜா வைத்தியநாதன், கிருஷ்ணமூர்த்தி இவர்களின் அண்ணன். சேகர் 26.12.1950ல் தஞ்சையில் பிறந்து, படித்து வளர்ந்தது சென்னை. மெக்கானிக்கல், ஏர்கண்டிஷன் இன்ஜினியரிங், டிப்ளமோ படித்த பின் சவுண்ட் இஞ்சினியர், புகைப்பட வீடியோ கலைஞர், கதாசிரியர், நாடக, திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், பத்திரிகை ஆசிரியர் போன்ற பல துறை வித்தகர். இலங்கை வானொலிக்காக 250 ஒலிச்சித்திரங்களையும், சென்னை வானொலிக்காக 1000 விளம்பர நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார். இரண்டு முறை சென்சார் போர்டு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். தமிழ் முதல் ரேடியோ விளம்பரம், முதல் தொலைக்காட்சி தொடர் வண்ணக்கோலங்கள் சேகருடையதே. இதுவரை 6500 முறை நாடகம் நடத்தியவர். எஸ்.வி.சேகர் ஒரே நாளில் 8 வேறுவேறு நாடகங்களை நடத்தியும், 32 நாடக புத்தகங்கள் ஒரே நாளில் வெளியிட்ட சாதனையும் தனித்தனியாக லிம்கா ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் பதிவாகியுள்ளது.  தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக (2006-11) அ.தி.மு.க-வின் சார்பில் வெற்றி பெற்று 100%

ஊழலற்ற அரசியல்வாதி என பெயர் பெற்றவர். எஸ்.வி.சேகர் ஒரு சிறந்த சமூக சேவையாளர். 53 முறை ரத்ததானம் செய்தவர். தன்னுடைய எஸ்.வி.சேகர் டிரஸ்ட். நாடகப்பிரியா டிரஸ்ட் மூலமாக நிதி திரட்டி மாணவர்கள் கல்வி, இலவச கண் அறுவை சிகிச்சை, உடல் ஊனமுற்றவர்கள், மற்றும் ஆதரவின்றி இறந்தவர்களை அடக்கம் என பல சேவைகளை செய்து வருகின்றார். நகைச்சுவை நாயகன், நாடக சூப்பர் ஸ்டார், நாடக வசூல் சக்கரவர்த்தி, நாடக ரத்னா பட்டங்களும், மைலாப்பூர் அகாடமி வாழ்நாள் சாதனையாளர் விருது, மூன்று கௌரவ டாக்டர் பட்டங்களும். தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைவாணர் விருதும் எஸ்.வி .சேகரை பெருமைப்படுத்தியுள்ளது. 

 1974-இல் முதல் இவர் தன்னுடைய கலைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 1974 இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறிமுகப்படுத்தியவர்கள் சிலர், கிரேசி மோகன், கோபு-பாபு, கிருஷ்ணகுமார், நிலா. இவர் கதாநாயகனாகவும், முக்கிய பாத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.