book

எல்லாரும் வாங்க

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. சேகர்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2014
Add to Cart

திரைப்பட-நாடக-சின்னத்திரை தொடர் இவற்றின் இயக்குனர்-தயாரிப்பாளர் –கதாசிரியர்-க்ரியேடிவ் ஹெட்-நடிகராக 1960-இல் தொடங்கிய இவரது கலைப்பயணம் , வெற்றிப்பயணமாகத் தொடர்ந்து கொணடிருக்கிறது. கலை ஞானம் மிக்க ’எஸ் வி சேகர் ‘ அனைவருக்கும் பிடித்த பெயர். எவரையும் புண்படுத்தாத –‘குபுக்’ கென்று சிரிக்கவைக்கும்-உடனடியக அவருக்குமட்டுமே தோன்றும் –உம்மனாமூஞ்சியயையும் புன்னகைக்கவைக்கும்-இவரின் ரத்ததில் ஊறிய நகைச்சுவைக்குப் பெயர் ‘சேகர் பாணி. நகைச்சுவை’. இவரின் குரு, வழிகாட்டி, இவரின் தந்தை தந்தை திரு எஸ்.வி வெங்கடராமன். சோவின் முதல் இரண்டு நாடகங்களை டைரக்ட் செய்தவர். 86 ஆயிரம் யூனிட் ரத்தம் சேமித்துக்கொடுத்தவர்.சேகருக்கு 10 வயதில் துப்பறியும் சாம்பு நாடகத்தில் நடிக்கவும், 11 வயதில் போட்டோ எடுக்கவும், 12 வயதில் ஸ்கூட்டர் ஒட்டவும் கற்றுக்கொடுத்தார். 13ம் வயதில் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களின் கே சரா சரா நாடகத்தில் ஸ்பெஷல் ஒலியமைப்பு செய்ய அனுமதித்தார். வாழ்க்கையில் படிப்பைவிட ஒழுக்கம் முக்கியம் என்பதை வலியுறுத்தியவர்.

சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர்(26-12-1950) எனப்பட்ட நமக்குத் தெரிந்த எஸ்.வி சேகர், படிப்பால் மெகானிகல் இஞ்சினியரிங், ஏர் கண்டிஷனிங் & ரெஃப்ரிஜிரேஷனில் டிப்ளமா படித்தவர். தொழிலால் அவர் ஒர ஒலிப்பதிவாளர், நிகழ்ச்சிதயாரிப்பாளர், ஸ்டில் ஃபோட்டோகிரஃபர், வீடியோகிரஃபர்,எடிடர், டைரக்டர். ‘நாரதர்’ தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

இவர் தமிழ்நாடு Ceentral Board of Film Censors –இன் Regional Chairperson ஆக 2முறை பணியாற்றியிருக்கிறார். சிறந்த அட்டைப்படத்திற்கான விருதை குமுதம் பத்திரிகையில் பெற்றுள்ளார்.

மோகம், வயனாடன் தம்பான், முகங்கள் ஆகிய படங்களுக்கு ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார்