
ஐந்து நாடகங்கள் (ஒலியாக நீங்கள் கேட்டவை ஒளியில் படிக்க)
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. ராஜகோபாலன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2021
Add to Cartதமிழ் இலக்கியத்தில் நாடகக் கலைக்குத் தனி இடம் உண்டு. அது மக்களின் கலை. அது மக்களுக்கு நெருக்கமான இலக்கிய வடிவம், அது மக்களோடு நெருங்கிப் பேசும் தோழமைக் கலை. அதனால்தான் சமுதாய சீர்திருத்த சிந்தனையாளர்கள் பலர் சமுதாயம் சார்ந்த கருத்துக்களை எழுத்தறிவற்ற மக்களிடையே கொண்டுசெல்ல நாடகத்தையே கையில் எடுத்தனர்.
பொதுவாக நாடகத்தை மூன்று வகைப்படுத்தலாம். நிகழ்த்துவதற்குரிய நாடகம், வாசிப்பதற்குரிய நாடகம், நிகழ்த்துவதற்கும் வாசிப்பதற்கும் ஏற்ற நாடகம். எழுத்தாளர் ராஜகோபாலன் அவர்கள் எழுதியுள்ள இந்த ஐந்து நாடகங்களும் நிகழ்த்துவதற்கும் வாசிப்பதற்கும் உரியவை.
இந்த நாடகத் தொகுப்பு நூலுள் ஐந்து நாடகங்கள் உள்ளன. ஐந்தும் சமுதாயம் சார்ந்தவையே. தனிநபரிலிருந்து குடும்பமும் குடும்பத்திலிருந்து சமுதாயமும் மலர்ச்சியடைவதால், எழுத்தாளர் ராஜகோபாலன் இம்மூன்றும் அகமும் புறமும் மலர்வதற்காகவே இந்த ஐந்து நாடகத்தையும் எழுதியுள்ளார்.
