
ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார் பற்றிய 100 சுவையான தகவல்கள்)
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் வை. சங்கரலிங்கனார்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789389968477
Add to Cartமதுரை, டாக்டர் புலவர் வை.சங்கரலிங்கனார் அவர்கள் தமிழகம் அறிந்த பண்பாளர். ஆசிரியப் பணியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியவர். மாணவர்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர். இவருடைய உரை கேட்டு உற்சாகம் பெறுபவர்கள் பலர். தன்னைப்போலவே அடுத்தவர்களையும் உற்சாகப்படுத்தி உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
'மக்களின் முதல்வர், மக்களுக்காகவே முதல்வர்' என்ற அடைமொழிகள் எல்லாம் எல்லா முதல்வர்களுக்கும் பொருந்தாது. மிகச் சிலருக்கே இவை பொருத்தமுடையதாக இருக்கும். அவர்களுள் ஒருவர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் என்று உறுதியாகக் கூறமுடியும். ஓமந்தூராரின் ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த மிக முக்கியமான சட்டங்கள்; ஆலய நூழைவுச் சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் ஆகியனவாகும்.
