book

இரண்டு தந்தையர்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீனிவாச ராமாநுஜர், சுந்தர் சருக்கை
பதிப்பகம் :மாற்று வெளியீட்டகம்
Publisher :Maatru Veliyeetagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193703779
Add to Cart

ஐன் ஸ் டைன், இராமானுஜன், காந் தி. மனித வரலாற்றின் மா பெரும் மூன்று பரிசோதனையாளர்கள். ஒருவர் அறிவியலில், ஒருவர் கணிதத்தில், ஒருவர் சத்திய வேட்கையில். இந்த மூவரையுமே அறிவியலாளர்கள் என்றோ , கணிதவியலாளர்கள் என்றோ, சத்தியத்தைத் தேடியவர்கள் என்றோ ஒரு இழை கொண்டு சேர்த்துவிடலாம், இவர்களில் ஒருவருக்குக் கணிதமும் அறிவியலும் தெரியாது என்றாலும். இவர்கள் எழுதி எழுதிப் பார்த்து, அழித்துவிட்டு, இறுதியாக எழுதிய சமன்பாடுகளுக்கு அடியில் அழிக்கப்பட்ட சமன்பாடுகளைத் தேடி சுந்தர் சருக்கை மேற்கொண்ட ஆராய்ச்சி என்றும் இந்த நாடகங்களைக் கருதலாம். பலிகளின் தடங்கள் இந்த மாபெரும் மனிதர்களின் மனதில் அழிக்க முடியாத சமன்பாடுகளை எழுதிப்பார்க்கின்றன. இதன் விளைவாக, உன்னதத்துக்கும் அதற்கான பலிகளுக்கும் இடையிலான உரையாடல்களாக இந்த நாடகங்கள் உருவெடுக்கின்றன. அறிவியல், கணிதம், வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற வெவ்வேறு அறிவுத் துறைகள் ஒன்றுசேரும் அதிசயம் வெகு அரிதாகத்தான் நிகழும். அது இப்போது இந்த நாடகங்களில் நிகழ்ந்திருக்கிறது. இதுபோன்ற பிரதிகள் வரும்போதுதான் தமிழின் ஆழ அகலங்கள் விரிவடையும். அதைத் தன் மொழிபெயர்ப்பின் மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார் சீனிவாச ராமாநுஜம். மேலும், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழில்தான் இந்த நாடகங்கள் முதன்முதலில் பிரசுரமாகின்றன என்பது கூடுதல் சிறப்பு!