book

மீதி வெள்ளித்திரையில்

Meethi Vellithiraiyil... (Articles on Films)

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :151
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788189359713
Add to Cart

திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலை வடிவம் எப்படி பேக் பைப்பரைப்போல எல்லோரையும் குழந்தைகளாக்கித் தன் பின்னால் இழுத்துச் செல்ல முடிந்தது என்பதை அவர் ஒரு வரலாற்றாய்வாளருக்குரிய முறையில் விளக்குகிறார். ஒரு நூற்றாண்டுக்கும் சற்று அதிகமான கால இடைவெளியில் அந்தக் கலை நம்மீது நிகழ்த்தியுள்ள தாக்கங்ளைத் தொகுக்கும் பாஸ்கரனின் கட்டுரைகள் நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு கலையின் நாம் கவனிக்கத் தவறிய பகுதிகளை அறிமுகப்படுத்துகின்றன. பன்முக அர்த்தங்களை உள்ளடக்கிய அவரது மொழிநடை இக் கட்டுரைகளுக்குப் புனைவின் சாயல்களை அளிப்பதால் அவை நம் வாசிப்பனுவத்தை மேலான தளத்துக்கு உயர்த்துகின்றன.