book

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொறி அ. வீரப்பன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

கட்டுமானப் பொறியாளர் தன் தேர்வு செய்த தொழிலைப் பொறுத்து நுழைவுநிலை வடிவமைப்புப் பொறியாளர் திட்ட மேலாளர்களுக்கு, ஒப்புதல் வழங்கிய திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடலுக்கும் கட்டுமனத்துக்கும் வேண்டிய வடிவமைப்பு, செலவு மதிப்பீடு ஆகியவற்றை தருகிறார். வடிவமைப்புப் பணி சார்ந்த தொழில்செய்ய தொழில்முறைப் பொறியாளர் உரிமம் பெற்றிருக்கவேண்டும். இப்பணிகளில் ஈடுபடும் தனியர் இந்த உரிமத்தைப் பெறுவதற்கான தேர்வில் கல்லூரியில் இருக்கும்போதே தேர்ச்சி பெறுதல் வேண்டும். நுழைவுநிலை கட்டுமான மேலாளர் பதவிகள் திட்டப் பொறியாளர்கள் அல்லது உதவித் திட்டப் பொறியாளர்கள் அழைக்கப்படுகின்றன. இவர்கள் திட்ட்த்துக்கான கொள்முதல் தேவைகளை உருவாக்கி அதர்கான பணியாணைகளை அணியமாக்கி மாதவாரி பாதீட்டு அறிக்கைகளை கூட்டங்களில் வைக்கவேண்டும். அக்கூட்டங்களை நடத்துவதற்கான நிகழ்ச்சிநிரல்களை உருவாக்கி கூட்டத்தை நடத்தவேண்டும். கட்டுமான மேலாண்மைப் பதவிக்கு தொழில்முறை உரிமமேதும் தேவையில்லை; ஆன்னல், அவ்வுரிமத்தைப் பெற்றிருந்தால் அவருக்கு எளிதாக வேலை கிடைக்கும். ஏனெனில், இந்த உரிமம் இருந்தால் இவர்தற்காலிக கட்டிட வடிவமைப்புகளில் ஒப்புதல் கையொப்பம் இடலாம்.