book

செம்மொழியும் சிவந்த ஈழமும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தஞ்சை இறையரசன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று நூறாண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்றது என்ன? செம்மொழி என்று அறிவிக்கப் பெறாமலே பல ஆண்டுகளாய்ச் சமஸ்கிருதம் பெற்று வந்த செல்வமும், சிறப்புகளும், வாய்ப்புகளும் இன்னும் தமிழுக்குத் தரப்படவில்லை. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழை செம்மொழி என்று புதியதாக ஒரு பட்டியல் உருவாக்கிச், செம்மொழி என்பதன் தகுதி 1500 ஆண்டுகள் என்று அறிவித்ததால், ஆயிரம் ஆண்டுப் பழமை கூட இல்லாத கன்னடமும் செம்மொழி என்று வந்து நிற்கிறது. அறிவிப்புகள் போகட்டும், வாழ்வியலில் தமிழ் எந்த இடத்தில் என்று பார்த்தால், தமிழ் நாட்டிலேயே தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டுத்தான் உள்ளது."