கல்பனா சாவ்லா
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :76
பதிப்பு :2
Published on :2012
Add to Cart ஆண், பெண் அனைவரும் கல்பனாவின் கதையைப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும். அவரைப்போலவே தடைகளை உடைக்கும் எண்ணம் வளரும். நோக்கங்களை எவ்வளவு உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை உருவாகும். போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்ற பாகுபாடுகளெல்லாம் மறைந்து வெகு காலமாகிவிட்டது. இன்று ஒருவரிடமுள்ள திறமைகளும், தனித்தகுதிகளுமே அவர்களை அளிக்க உதவும் அளவுகோல். இந்தியப் பெண்கள் என்றாலே உலகம் இளக்காரமாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தன் தகுதி ஒன்றைய துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. பெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய சரித்திரம் அவருடைது . கல்பனாவின் பெற்றோரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்களும் ஏராளம் இருக்கிறது. நம் நாட்டில் இன்னும் எத்தனையோ கல்பனா சாவ்லாக்கள் மறைந்து கிடக்கலாம். அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர்களுக்கு இந்நூல் வழிகாட்டும்.