book

கம்பனில் சமய நல்லிணக்கம்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.சாயபு மரைக்காயர்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

முந்தைய நாள் அந்த நகருக்கு வந்து “மண்வழி நடந்து அடி வருந்தப் போன” அரசகுமாரன் மிதிலைச் செல்வியின் “கண்வழி நுழைந்திடும் கள்வனாகி” அவள் இதயத்தை ஆட்கொண்டு விட்டான். மகாமேரு போல நிற்கும் அந்த சிவதனுசு என்னும் வில்லை உடைக்கவேண்டும், பாற்கடல் பள்ளியில் பிரிந்த தெய்வ தம்பதியர் ஒன்று சேரவேண்டும் – அது ஒன்றுதான் பாக்கி. அண்ணலின் நெஞ்சிலும் அவளே நீக்கமற நிறைந்து விட்டாள். இரவு முழுவதும் அவளையே எண்ணி, எப்போது நிலவு மறையும், கதிரவன் உதிப்பான் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான் இராமன்