book

பறவைகள் எப்படிப் பறக்கக் கற்றன

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உ. கருப்பணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788123412047
Add to Cart

நமது ஊரில் இருக்கும்  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். வருடத்தின் குறிப்பிட்ட சில மாதங்களில் வேடந்தாங்கலைத் தேடி பறவைகள் படையெடுத்து வரும். அவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வருபவை. வடஅமெரிக்க கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் கனடா முதல் சைபீரியா வரை உலகின் பல இடங்களில் இருந்தும் பல்வேறு வகை பறவைகள் அங்கு வருகின்றன. இதில் பெரும்பாலானவை இனப்பெருக்கத்துக்காக வருபவை, சிலவை வேறு எங்கோ செல்லும் வழியில் இங்கே சில காலம் தங்கிச் செல்பவை. எது எப்படியாக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வேறு இடத்துக்கு வழி தவறாமல் வந்து சேர்கின்றன. இப்படிப் பல வருடங்களாக இந்த விஷயம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது, அதில் வேடந்தாங்கல் என்பது சிறிய உதாரணம்தான் உலகம் முழுவதிலுமே பல இடங்களில் பறவைகளின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது.