அச்சம் தவிர் உச்சம் தொடு
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வரலொட்டி ரெங்கசாமி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788183454889
Add to Cartஉலகெங்கிலும் உள்ள இரண்டு லட்சம் பெண்கள் ஒரு வலைதளத்தில்
(penmai.com) இணைந்திருக்கிறார்கள். இவர்களின் சிறப்பு விருந்தினனாக ஒரு
மாதம் இருந்தேன். விருந்தினன் என்றால் வேளா வேளைக்கு அறுசுவை உணவு,
உபச்சாரம், உறக்கம் போன்ற எதுவும் இல்லை. இந்த ஒரு மாதம் இவர்கள் கேட்கும்
கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அப்பப்பா! அந்தக் கேள்விகளில்தான்
எத்தனை வீரியம்! என்ன வீச்சு! எப்படி எழுதத்
தொடங்கினீர்கள் என்று
வெள்ளந்தியாக ஆரம்பித்து ‘இனிமேல் எழுதவே வேண்டாம் என்று வெறுத்து
வெதும்பிய தருணங்கள் பற்றி...' என்று என் ஆன்மாவைக் குடைந்தெடுத்த
கேள்விகள் அவை. இது ஒரு வகையான மூலிகை.
இதற்கிடையே தினமலர் நாளிதழின் இயக்குனர் நண்பர் திரு எல். ராமசுப்பு என்ற சுரேஷ் “படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் மனதில் இருக்கும் பயங்களையும் சந்தேகங்களையும் போக்கி அந்த இடத்தில் தன்னம்பிக்கை விதைகளை விதைக்க வேண்டும்.