
கத்தும் குயிலோசை (பாரதி சிந்தனைக் கட்டுரைகள்)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.வி. சுப்பராமன்
பதிப்பகம் :கிரிஜா பதிப்பகம்
Publisher :Kirija Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2019
Add to Cartஇறைவனின் ஆயிரமாயிரம் படைப்புக்களில் எத்தனை எத்தனை புதுமைகள்! எத்தனை எத்தனை வினோதங்கள்! எத்தனை இன்பங்கள்! எத்தனை நிலைகள்! எத்தனை வேறுபாடுகள்!
ஆம்! பாரதிப் பெருந்தகை வியப்பில், நன்றி ததும்ப, உள்ளம் மகிழ்ந்து, நெக்குருகி, அவரது பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் பாலிக்கும் முறையில் பாடுவார்:
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள்
இறைவா! இறைவா இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபல நல் லழகுகள் சமைத்தாய்!
முக்தியென் றொருநிலை சமைத்தாய் –அங்கு
முழுநினையு முணரும் உணர்வமைத்தாய்
பக்தியென் றொருநிலை வகுத்தாய் – எங்கள்
பரமா! பரமா! பரமா!
அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் அன்னை பராசக்தியிடம் கேட்பார். நம்பிக்கை அவரது மிகப் பெரும் வலிமை! இல்லாவிடில்
”ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே,
