book

மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் வெற்றிக்கான சூத்திரங்கள்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. உதயகுமார்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :288
பதிப்பு :6
Published on :2007
Out of Stock
Add to Alert List

வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியதில் பணியாற்றினார், மேலும் அவரது தாய் வழி தாத்தா நேஷனல் வங்கியின் தலைவராக இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்ன்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாய்ந்த, லேக்சைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார், அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. அவர் கணினியின்பால் பெரிதும் கவர்ந்து இழுக்கப்பட்டர். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஒட்டைகளைப் பயன்படுத்தி அதிகக் கணினி நேரத்தை உபயோகித்ததாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.