book

கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: க்ளிக் ரவி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :166
பதிப்பு :2
Published on :2005
Out of Stock
Add to Alert List

உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வடமேற்கே சியால்கோட்டிலும் வடகிழக்கே வங்காளத்திலும் தெற்கே தமிழகத்திலுமாக தலைகீழ் ஆய்த எழுத்தினைப் போல் சுடர் விட்ட முப்பெருங் கவிகளான இக்பால், தாகூர் மற்றும் பாரதி ஆகியோரின் சமகால மகாகவியாக லெபனானில் பிறந்து வளர்ந்து பின்னர் அமெரிக்காவில்  குடியேறி வாழ்ந்தவர் கலீல் ஜிப்ரான். ஏசு நாதரின் தாய்மொழியான அரமி (Aramaic) மொழியிலேயே வழிபாடு நிகழ்த்துகின்ற சிரியன் மரோனைட் கிறித்துவப் பிரிவைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த கலீல் ஜிப்ரான் தனது ஆக்கங்களை அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதினார்.