
பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக (3 பாகங்களும்) (HB)
Pirkala Cholar Charithiram Mulumaiyaka (3 Pakangalum)
₹620
எழுத்தாளர் :T.V. சதாசிவ பண்டாரத்தார்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :648
பதிப்பு :1
Published on :2008
Out of StockAdd to Alert List
சோழர் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு ஆதாரமாக இதுவரைக்கும் தமிழில் இருப்பது சதாசிவ பண்டாரத்தாரின் நூலும் அவருக்குப் பிறகு கே.கே.பிள்ளை எழுதிய நூலும்தான். ஆனால், “இப்போதுள்ள வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு சதாசிவ பண்டாரத்தாரைப் பற்றியோ அவர் எழுதிய ‘பிற்காலச் சோழர் வரலாறு’ நூல் பற்றியோ அவ்வளவாய் தெரியவில்லையே” என்று ஆதங்கப்படுகிறார் சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன்.இதுகுறித்து இன்னும் பேசிய அவர், “நான் வரலாற்றுத் துறை பேராசிரியராக வர சதாசிவ பண்டாரத்தாரின் நூல்களும் முக்கியக் காரணம். அவர் எழுதிய ‘பிற்காலச் சோழர் வரலாறு’ நூலை இதுவரை 150-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் ஆர்வலர் களுக்கும் வாங்கித் தந்திருக்கிறேன்.
