book

கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் (மூலமும் - உரையும்)

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

பொதுவாகச் தமிழ் அறிஞர்கள், சித்தர்களின் பாடல்களை ஏற்பதில்லை என்பது என்னுடைய அனுபவமாகும். நான் மிகுந்த ஈடுபாட்டோடு ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்வதைக் கண்டு சில தமிழ் அறிஞர்கள், சித்தர்கள் வழக்குத் தமிழில் கல், நில், சொல் என்ற சொற்களை கல்லு, நில்லு, சொல்லு என்று எழுதியும், தளை, சீர் விதிகளைப் பின்பற்றாமலும் பாடியிருப்பதைப் படிப்பதே பாவம் என்று கூறியுள்ளனர். இப்பாடல்களில் ஆன்மிக இரகிசயங்கள் பொதிந்திருப்பதை நான் அவர்களுக்கு விளக்கியபோது இலக்கணப் பிழையுடைய இப்பாடல்களைப் படித்து சொர்க்கத்திற்குப் போவதைவிட படிக்காமல் நரகம் செல்லலாம் என்று எனக்கு அறிவுரை கூறியவர்களும் உண்டு.