தொடையதிகாரம்
₹375+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குழந்தை
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Add to Cartபுலவர் குழந்தை (ஜூலை 1, 1906 - செப்டம்பர் 22, 1972) தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மாநகரத்தின் தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ”ஓல வலசு” என்னும் சிற்றூரில் முத்துசாமிக்கவுண்டர், சின்னம்மை ஆகியோருக்கு புலவர் குழந்தை பிறந்தார்
பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப் பயிற்சி செய்யும் திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார் குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு பாடவல்லவர். இவருடைய பொழுது போக்கு பாட்டெழுதுவது. 1934ல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். ஓலவலசில் இவருக்கு முன் படித்தவர் எவரும் இல்லை. அந்த காலத்தில் அந்த ஊரில் எவருக்கும் கையொப்பம் செய்யவும் தெரியாது. இவர் தாமாக தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று கொண்டிருந்த போது அந்த ஊரை சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தார்.