book

திரு அருட்பா உரை நடை (கெட்டி அட்டை)

Thiru Arutpa Urai Nadai (Hardcover)

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராமலிங்க அடிகளார்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :577
பதிப்பு :1
ISBN :9788183796750
Add to Cart

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய இந்த உரைநடைப் பகுதி, சன்மார்க்க அறிஞர்களால் நூறாண்டுகளுக்கு முன்பு (1896இல்) வெளியிடப்பட்டுள்ளது. அதன் மறுபதிப்புகள் 1924, 1931, 1978 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்திருக்கின்றன. இதனை வடலூர் தெய்வ நிலையம் 2000இல் முதல் பதிப்பு வெளியிட்டு, தொடர்ந்து ஒன்பது பதிப்புகளை வெளியிட்டுள்ளது சிறப்புக்குரியதாகும். அருட்பிரகாச வள்ளலாரின் இந்த உரைநடைப்பகுதி சன்மார்க்க அருள் கலைக்களஞ்சியமாகப் போற்றப்படுகிற சிறப்புக்குரியது. இந்நூல் மீண்டும் சன்மார்க்க அறிஞர் களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தற்போது இதனைப் பதிப்பித்து நாங்கள் வெளியிடுகிறோம். வள்ளற்பெருமான் அருளிய மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியன இடம் பெற்றுள்ள இவ்வுரை நடைப்பகுதியை மீண்டும் வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த பெருமிதமடைகிறோம். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளல் பெருமான் வடித்தளித்த ஆன்மிகச் செல்வமான இந்நூலைத் தமிழ் ஆர்வலர்கள் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.