
தமிழ் மொழி அமைப்பியல்
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. அகத்தியலிங்கம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :342
பதிப்பு :1
Published on :2024
Add to Cartஇது வரலாற்று இலக்கணமோ அல்லது ஒப்பிலக்கணமோ அல்ல. முழுக்க முழுக்க இன்றைய தமிழுக்கு எழுதப்பட்ட ஒரு விவரண இலக்கணம். இன்றைய தமிழின் அமைப்பு பற்றிக் கூறும் இலக்கணம். மொழியியல் சிந்தனையும் மரபு இலக்கண நெறியும் ஒருசேர நிற்கும் நிலையில் இவ்விரண்டிலும் சிறந்து காணப்படும் கொள்கைகளும் கோட்பாடுகளும் இந்நூலின் கண் காணக் கிடக்கின்றன. இன்றைய தமிழ் மொழியின் அமைப்பை அல்லது அதன் இலக்கணத்தை நன்கு விளக்கும் நிலையிலேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இலக்கணம் என்பது பரந்துபட்ட பரிமாணத்தைக் கொண்டது. இந்நிலையில் முக்கியமான கூறுகள் விளக்கப்படுகின்றன; ஆராயவும் படுகின்றன. சில விடுபட்டிருக்கலாம். ஆசிரியருடைய கவனத்துக்கு அவை கொண்டு வரப்படின் அடுத்த பதிப்பில் அவை விளக்கப்படும். தமிழ் மொழியின் ஒலியமைப்பை, ஒலியன் அமைப்பை. சொல்லமைப்பை, பல்வேறு இலக்கணக் கூறுகளின் அமைப்பை, தொடர் அமைப்பை, வாக்கிய அமைப்பை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்நூல் எந்தவொரு இலக்கணக் கூறும் குறிப்பிட்ட ஒரு அமைப்பில்தான் அமைந்துள்ளது என்பதைக் காட்டும் நிலையில் உள்ளது இது.எனவே தான் இது ‘தமிழ்மொழி அமைப்பியல்' எனப்பெயர் பெறுகின்றது.
