book

வரலாறு கற்பிக்கும் முறைகள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். கண்ணம்மாள்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :318
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இணைவழிப் புத்தகங்களில் மாணவர்கள் படித்தறிந்த கருத்துகளைக் குறித்துவைப்பதுபற்றிச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இணைவழிப் படிப்பானது வரலாற்றுப் பாடப்பொருள் தொடர்பாகத் தேவையான சிறப்பான கருத்துகளைப் பிற நூல்களிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது. பொது அறிவை வளர்க்கவும், படிக்கும் பழக்கம் ஏற்படவும் இத்தகைய படிப்பு உதவுகின்றது.
கற்றல் பற்றிய செயல்களில் எவ்விதம் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை இவ்விதப் பதிவுப்புத்தகங்கள் தெளிவுபடுத்துகின்றன. மாணவர்களின் திறமை, மனப்போக்கு போன்றவற்றை ஆய்ந்தறிவதற்கும் இவை உதவுகின்றன. இப் பதிவுப் புத்தகங்களைப் பயற்சிப் புத்தகங்களாக எந்த மாணவனாலும் கருதப்பட மாட்டாது. தன் இச்சைப்படி இப் புத்தகங்களை மாணவன் உருவாக்குவதால், அதைப்பற்றி மகிழ்ச்சி அடைவான். இக் குறிப்புப் புத்தகங்களைத் தேர்வுக்குப் பிறகு பயனற்றதாகக் கருதாமல் எப்பொழுதும் தன்னிடம் இருக்கவேண்டும் என்றும் கருத ஆரம்பிப்பான் என்பதை உறுதியாக கூறமுடியும்.