book

காதலாகிக் கசிந்து

Kadhalaagi Kasindhu

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. சகுந்தலை
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :131
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
- திருஞானசம்பந்தர்
இறைவனை "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" உருகி உருகி வணங்க வேண்டுமென்று திருஞானசம்பந்தர் பெருமான் இங்ஙனம் குறிப்பிடுகிறார்...
பொதுவாக காதல் என்றால்.. அதில் ஆண்,பெண் என்று இருவர் உண்டு...
இறைவனைக் குறித்து சொல்லுகையில்... அவன் என்றுமே எல்லா உயிர்களுக்கும் "பதி" என்று குறிப்பர் பெரியோர்... நம் ஆன்மாவை "பசு" என்பர்...
இந்த பசுவை(ஆண்மா) ஆளும் பதியை(தலைவன்) "பசுபதி" என்று வணங்குகிறோம்...
ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு இறைவன் மீது உண்மையான காதல் உண்டானது... பெரும்பாலும் ஏதாவது கோரிக்கை வைக்க அரசியல்வாதியை பார்ப்பது போன்று தான் பலரும் இன்றைக்கு கோவிலுக்கு செல்கின்றனர்...
உண்டியலில் காசு போடுவதுகூட எதோ அரசியல்வாதிக்கு லஞ்சம் கொடுப்பது போன்றுதான் கொடுக்கிறார்கள்... வீட்டில் வணங்கினாலும் அப்படித்தான்...
பிள்ளைகளுக்கு சொல்லித்தரும்போதும் "சாமி கண்ணை குத்திடும் ஒழுங்கா சாமி கும்பிடு" என்று தவறாகத் தான் சொல்லித்தருகிறார்கள் பெரும்பாலானோர்...
இப்படி செய்வதால் தான் இன்று கமலஹாசன் போன்ற தற்குறிகள் எல்லாம் தன்னை பகுத்தறிவாளன் என்ற போர்வையில் ஊடகத்தில் பேசி பலரையும் கெடுக்க வழி வகுக்கப் படுகிறது...
நம் பக்தியில் தெளிவு இல்லாததால் தான் அதை ஒரு மூடன் மூட நம்பிக்கை என்று சொல்லும்போது நம்மால் பதில் சொல்ல முடியவில்லை...