நீலகேசி மூலமும் உரையும்
₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :384
பதிப்பு :4
Published on :2017
Add to Cartநல்லார் வணங்கப்படுவான்' என்ற அருகன் பாடல் முதல் துதி. பாஞ்சால தேசத்தைச் சமுத்திரராசன் ஆள்கிறான். அந்நகரில் பலாலையம் என்ற சுடுகாட்டில் காளி கோவில் இருந்தது. அதில் முனிச்சந்திரன் எனும் சமணமுனிவர் தவம் செய்து வந்தார்.அரசிக்கு ஆண்மகவு பிறந்தது. மக்கள் நன்றி செலுத்தக் காளிக்குஆடுகளைப் பலியிட வருகின்றனர். முனிவர் அகிம்சையைப் போதித்துப் பலியை நிறுத்துகிறார். சினமுற்ற காளி நீலியிடம் முறையிடுகிறது. பழையனூர் நீலி முனிவனை அஞ்சுவிக்க முடியாமல் அழகிய பெண் வடிவில் வந்து மயக்க முயன்று தோற்கிறாள். முனிவனிடம் அகிம்சை உபதேசம் பெற்று, அதைப் பரப்பும் பணி மேற்கொள்ளலானாள். காம்பிலி நகரில், வாதிட்டு அறைகூவி குண்டலகேசி புத்த சமயத்தை நிலைநாட்டி இருந்தாள். நீலகேசி அங்கே சென்று அரசன் முன்னிலையில் குண்டலகேசியின் கூற்றுக்கள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெற்று, அவளது ஆசிரியனான அருக்க சந்திரனை உச்சயினியில் வென்று சமணன் ஆக்குகிறாள். பதுமபுரம் சென்று மொக்கலன் எனும் புத்த சமயத்தவனை வென்று சமணன் ஆக்குகிறாள். புத்தனையே வெல்ல எண்ணி, கபிலபுரம் செல்கிறாள். ஆன்மா ஒன்று உண்டு என்பதை நிலைநாட்டி புத்தரை வெற்றி கொள்கிறாள். அகிம்சைக்கு உடன்பட்டாலும் பௌத்தர்கள் புலால் உண்பதைக் கடிகிறாள். பின்னர் நீலகேசி ஆகாய மார்க்கமாகச் சென்று ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேதவாதம், பூதவாதம் ஆகிய ஐந்து சமய வேதங்களை வென்று, அரசனாலும் மக்களாலும் நன்கு மதிக்கப்பட்டு சமண சமயத்தை வளர்த்து வந்தாள் என்று நூல் முடிகிறது.