book

பைபிள் பேசும் மனிதர்கள் பழைய ஏற்பாடு

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேவியர்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

ஆதாம், ஏவாள், நோவா, மோசே, ஆபிரகாம், தாவீது, சாலமோன் எனத் தொடர்கின்ற பைபிளில் பழைய ஏற்பாட்டில் உலவும் மனிதர்களின் வாழ்க்கை நமக்கான பாடம். எப்படி வாழவேண்டும், எப்படி வாழக் கூடாது என்று வழிகாட்டுகிறவர்கள் அவர்கள். ஹீரோக்களும் அவர்களே, வில்லன்களும் அவர்களே! பலங்களும் அவர்களே; பலவீனங்களும் அவர்களே. இந்த நூல் அவர்களுடைய வாழ்வையும், சமூக, அரசியல், இறையியல் பின்னணிகளையும் பேசுகிறது. விவிலியத்திற்கு வெளியே உள்ள சில தகவல்களை வரலாற்றுப் புரிதலுக்காகவும், கதாபாத்திரங்களின் தெளிவுக்காகவும் இந்த நூல் உள்வாங்கியிருக்கிறது. எப்படி ஒரு கடல் தண்ணீரை மதில் போல் தேக்கி இஸ்ரவேல் மக்களுக்கு வழிவிட்டது? எப்படி ரதங்களே சீறிப்பாயும் அளவுக்கு அகலமான மதில் வெறும் புகழ்ச் சத்தத்தினால் உடைந்து விழுந்தது? எப்படி ஒரு காகம் நாள்தோறும் எலியாவுக்கு உணவு ஊட்டியது? எப்படி ஒரு கழுதை பேசியது? எப்படி ஒரு கூழாங்கல் ஒரு ராட்சசனைச் சாய்த்தது? எப்படி எப்படி எப்படி எனும் வியப்பின் வினாக்களோடு பயணிக்கிறது இந்த நூல்.