
தமிழகம் ஊரும் பேரும்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுப்பிள்ளை
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
ஊரும் பேரும்’ என்னும் இந்நூல் வரலாற்றின்பாற்பட்டது. இவ்வரலாறு தமிழ்நாட்டின் ஊரையும் பேரையும் விளக்குங் கலங்கரை. ‘ஊரும் பேரும்’என்னுந் தலைப்பு விழுமியது. அஃது ஆழ்ந்த பொருண்மையுடையது; சுரங்கம் போன்றது. வாழ்க்கைக்குப் பல துறைகள் தேவை. அவற்றுள் ஆவி போன்றவை ஊரும் பேரும். ஊரும் பேரும் வாழ்க்கையை இயக்கி வளர்ப்பன என்று கூறல் மிகையாகாது. ஊர் பேரால் உலகம் இயங்கல் வெள்ளிடைமலை. ஊர் பேரே உலகம்: வாழ்க்கை; எல்லாம் எல்லாம். இன்னோரன்ன சிறப்புக்கள் பல வாய்ந்த ‘ஊரும் பேரும்’ இந்நூலுக்குத் தலைப்பாய் அமைந்தது. நூலின் பொருண்மையை விளக்கத் தலைப்பொன்றே சாலும். நூலுக்கேற்ற தலைப்பு; தலைப்புக்கேற்ற நூல். திரு.வி.க
