book

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.சு. பிள்ளை
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

இச்சிறு நூலானாது மெய்கண்ட தேவநாயனாரது வரலாற்றினை ஆராய்ச்சி முறையாக இயம்புகின்றது. சிவஞானபோதம் தமிழிலே முதல் நூலாக அமைந்திருப்பதற்குரிய காரணங்கள் இதனுள் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. சிவஞானபோதத்திற்கு ஒப்பற்ற பேருரையாக விளங்குஞ்சிவஞான பாடியத்தின் சாரமானது சுருக்கமாக இதனுள் விளக்கப் பட்டிருக்கிறது. சிவஞான போதத்திலுள்ள ஒவ்வொரு சூத்திரத்திற்கும் அதன் கருத்திற்கும் அதன் அதிகரணங்களிலுள்ள வாக்கியம், ஏது, உதாரணச் செய்யுள் என்பவற்றிற்குந் தெளிவான பொழிப்புரையும் குறிப்புரையும் சிவ ஞானபோதம் தோன்றிய திருவெண்ணெய்நல்லூரின் சிறப்புஞ் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய நூல், சிவஞானபோதக் கருத்தினை எளிதாயுந் தெளிவாகவுந் தெரிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன்படுமாதலின், இது சித்தாந்த மாணவர்களால் ஒருதலையாகக் கற்கப்பெறுதற்குரியது.
இந்நூலை அச்சியற்றுவித்துத் திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டார் சந்நிதியில், அவர் திருநாளாகிய இன்று இதனை வெளியிட்ட சென்னை சைவ சித்தாந்த மகா சமாச அமைச்சர், திருவாளர் ம.பாலசுப்பிரமணிய முதலியார், பி.எ., பி.எல்., அட்வகேட் அவர்கட்குப் பெரிதும் கடப்பாடுடையேன்.