
தேவாரப்பாடல்களும் தமிழிசையும்
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அக்ரி K.S. சக்திவேல்
பதிப்பகம் :விதை வெளியீடு
Publisher :Vithai Veliyedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :163
பதிப்பு :1
Published on :2014
குறிச்சொற்கள் :niyandar selvan, Udambu koriya
Add to Cartசங்க காலத்திற்கு முன்பும், சங்க காலத்திலும் தமிழிசை தழைத்தோங்கி வளர்ந்து இருந்தது. அந்தக் காலத்தில் தமிழிசையின் வளர்ச்சியையும், செல்வாக்கையும் பார்த்தவர்கள் அடுத்த சில பத்தாண்டுகளில் தமிழிசை பெரும் சரிவைச் சந்திக்கப் போகிறது என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், சமணர்கள் காலத்தில் தமிழிசை மிகக்கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. சமணர்கள் காலம் தான் தமிழ்நாட்டில் களப்பிரர்கள் காலம் என்று அழைக்கப்பட்டது. களப்பிரர்கள் காலத்தில் சமண மதமும், பவுத்த மதமும் தான் செல்வாக்கு பெற்று விளங்கின. ஆனால், அவர்களுக்கு இசை மீது நாட்டம் இல்லை; அவர்கள் இசையை வெறுத்தனர். அதனால், சமணர்களின் காலமான கி.பி. 300 முதல் 600 வரை தமிழ்நாட்டில் தமிழிசை முடங்கிக் கிடந்தது. தமிழிசையைப் பொருத்தவரை அது இருண்ட காலம்.
