book

உடைபடா முத்திரை அல்லது பாவசங்கீர்த்தனத்தின் மகிமை

₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஜே. மிக்கேல், சங். இராஜரிஷி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395442572
Out of Stock
Add to Alert List

சங். இராஜரிஷி எம்.ஜெ.மிக்கேல் சுவாமியாரால் இயற்றப்பட்டது ஒரு கத்தோலிக்கர் தான் செய்த பாவங்களுக்காக மனம்வருந்தி பாவமன்னிப்பு வேண்டி அவற்றை மதகுருவிடம் அறிக்கையிடுவார். இது கத்தோலிக்கக் கிறிஸ்தவத் திருச்சபையின் மரபு. இதை முன்னர் ’பாவசங்கீர்த்தனம்’ என்றும் இப்போது ’ஒப்புரவு அருட்சாதனம்’ என்றும் அழைக்கிறார்கள். பாவமன்னிப்பை மதகுருவிடம் மட்டுமே இரகசியமாக அறிக்கையிட வேண்டும்; அந்த மதகுரு தன்னிடம் பாவமன்னிப்பு வேண்டிச் சொல்லப்பட்ட எந்த விபரத்தையும் வெளியில் சொல்லமாட்டார். அவர் மதகுருவாகும்போது இதற்கான உறுதிமொழி எடுக்கவேண்டும். இதுதான் உடைபடா முத்திரை. இந்த நாவலின் கருப்பொருள் இந்த உறுதிமொழியின் அடிப்படையிலேயே அமைகிறது. பாரதி வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் பாவமன்னிப்பையும் அது சார்ந்த உறுதிமொழியையும் மையமாகக் கொண்டு, சமயம் சார்ந்து இருந்தாலும் மொழிநடையிலும் கட்டமைப்பிலும் இந்நாவல் இலக்கியத் தரம் கொண்டிருக்கிறது. தமிழின் ஆரம்பகால நாவல்களில் இதுவும் ஒன்று. நூறு ஆண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் நிலைபேறு பெற்றிருக்கிறது இந்த நாவல்.