book

படிக்க ஜெயிக்க

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகி. சிவம்
பதிப்பகம் :சுகி புக்ஸ்
Publisher :Sugi Books
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :48
பதிப்பு :3
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

ராத்திரி முழுக்க எனக்கும் அப்பாவுக்கும் வாக்கு வாதம் . என்னை மேலே படிக்க வைக்க முடியாததற்குக் காரணம் கேட்டேன். அதுக்கு துட்டு வோணும். இல்கே சோத்துக்கே ததிங்கினத்தோம் போடுது என்று பிடிவாதமாகப் படிக்க வைக்க மறுத்துவிட்டார். ராத்திரி முழுக்க எனக்கு தூக்கமே வரவில்லை. பொழுது விடிந்தது. எழுந்து போய் எதிர்ல இருக்கிற   குழாயில முகத்தைக் கழுவிட்டு நேரா அப்பா கிட்டே வந்தேன். என்னை மேலபடிக்க வைக்க உனக்கு எவ்வளவு பணம் வேணும்? என்று கேட்டேன். மாதம் ஒரு நூறு ரூபாயாவது ஆகும். சரி, நான் சம்பாதித்துத் தர்றேன். என்னை படிக்க வை,ன்னு சொல்லிட்டு, தெருவில இருக்கிற ஒவ்வொறு வீடா போனேன்.உங்க பசங்களுக்கு நான் டியூசன் சொல்லித்தர்றேன். என்கிட்ட அனுப்புங்க. உங்களால் என்ன முடியுமோ கொடுங்க என்று கேட்டேன். எல்லோரும் அனுப்பினாங்க. எஸ்.எஸ்.எல்.சி யான நான் எனக்குக் கீழ் எட்டு,ஒன்பது பத்தாம் வகுப்பு பசங்களுக்கு டியூஷன் எடுத்தேன். பி.யு.சி,பி,ஏ,என படிப்பு உயர உயர அதற்கும் கீழ் உள்ள மாணவர்கட்கு டியூஷன் எடுத்து செம சம்பாத்தியம். பச்சையப்பன் கல்லூரியில் ஒரு மாணவனா நடந்து போகும் போதே மனசுக்குள்ளே பேராசிரியராகத்தான் நினைச்சுக்கிட்டுப் போவேன்.நினைப்பு இன்று நிஜமாகிவிட்டது.