தேவதைகளும் சாத்தான்களும்
₹750
எழுத்தாளர் :டான் பிரவுன்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :752
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390811014
Add to Cartமூச்சுமுட்ட வைக்கும் நிகழ்நேர சாகசம்”
- சான் பிரான்சிஸ்கோ க்ரானிக்கல்
ஒரு பழங்கால ரகசிய சகோதரத்துவ அமைப்பு
ஒரு புதிய பேரழிவு ஆயுதம்
சிந்திக்கவியலாத ஒரு இலக்கு
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு சின்னவியலாளர் ராபர்ட் லேங்டன், கொலைசெய்யப்பட்ட இயற்பியலாளர் ஒருவரின் மார்பில் பதிக்கப்பட்ட ரகசிய சின்னம் பற்றி ஆராய, ஸ்விஸின் ஆய்வமைப்பு ஒன்றுக்கு அழைக்கப்படுகிறார். அங்கே அவர் கண்டறிவதோ கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
நூற்றாண்டுப் பழமையான தலைமறைவு அமைப்பான இல்லுமினாட்டி, கத்தோலிக்க தேவாலயத்துக்கு எதிராக மேற்கொள்ளும் அழிவுபயக்கும் பழிக்குப் பழி நடவடிக்கை. ஆற்றல்மிகு டைம்பாம் ஒன்றிலிருந்து வாடிகனைக் காக்க தீவிரமுயற்சியை மேற்கொள்ளும் லேங்டன், ரோமின் காவல் படைகளுடனும் புதிரார்ந்த அறிவியலாளரான விட்டோரியா வெத்ராவுடனும் கைகோக்கிறார். அவர்கள் இருவரும் மூடப்பட்ட நிலவறைகள், அபாயகரமான நிலத்தடி கல்லறைகள், கைவிடப்பட்ட கிறித்துவ தேவாலயங்கள், பூமியின் மிகவும் ரகசியமான பெட்டகங்கள், நெடுங்காலமாக மறக்கப்பட்ட இல்லுமினாட்டியின் மறைவிடங்கள் ஊடாக ஒரு வெறித்தனமான தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர்.