கடைசி ரயில் பெட்டி
₹235+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலாண்ட பாரதி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2022
Add to Cartஎன்னுடைய பலவருட வாசிப்பு அனுபவத்தில், எழுத்தை வைத்தே எழுதும் கலைஞனைப் பற்றி பலதையும் புரிந்து கொள்ள முடியும் எனும் என் கணிப்பு அகிலாண்டபாரதியின் படைப்பில் சற்றே உலுக்கப்பட்டது. ரயில் பயணத்தில் அது சகஜந்தானே! எழுத்தாளரைப் பற்றி அதிகம் ஊகிக்கமுடியாத, தனி சாதுர்யத்தோடு ஆரம்பிக்கும் எழுத்து, பிறகு நெல்லைத் தமிழ், ஊர்கள், அரசு மருத்துவமனை, என்று நமக்குத் தெரிந்த பாரதியைக் கண்ணில் காட்டுகிறது. ‘உண்மையான சொற்கள் நேர்த்தியாகஇருப்பதில்லை நேர்த்தியான சொற்களில்உண்மை இருப்பதில்லை’ என்பதைமீறி ‘கடைசி ரயில்ப்பெட்டி’ அன்றாட வாழ்வின் உண்மையான மனிதர்களை மிக நேர்த்தியாய் அடுக்கி வைத்திருக்கின்றது. விதவிதமான கதாபாத்திரங்களைச் சீட்டுக்கட்டு போல் கலைத்துப் போட்டு பிறகு விசிறியாக ஒன்று சேர்த்து வாசிக்கத் தரும் போது வாசகர்களின் மனம் நிச்சயம் பூரிக்கும்.