book

சோளம் என்கிற பேத்தி

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. கண்ணன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :202
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392876868
Add to Cart

சென்னையின் மணப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். இவரது முதல் சிறுகதை 1980ல் விகடனில் வந்ததைத் தொடர்ந்து பல சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. ஒரு சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. இது இவருடைய முதல் நாவல்.

கதைகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. பார்த்த, கேட்ட விஷயங்களில் புனைவைக் கலந்தால் நல்ல கதைகள் உருவாகும் என்பதற்கு இந்த நாவலையும் ஒரு உதாரணமாகச் சொல்லலாம். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை கிட்டத்தட்ட Hyper realistic யுத்தியில் சொல்லும் நாவல்.

சோளம் என்கிற சிறுமியின் Coming of age நாவல் இது என்றும் கூறலாம். கொல்லைக்குச் செல்வதற்கே பயப்படும் அப்பாவி சோளம், யாராக மாறுகிறாள் என்பது வரை நாவல் நம்மைக் கைப்பிடித்து அழைத்து செல்கிறது. பாலியல் குறித்த பேச்சுகளை உள்ளுக்குள் இரசித்துக் கொண்டு வெளியே காட்டிக்கொள்ளாமலிருப்பது, காதல் வயப்படுவது, மாலாவுக்கும் தனக்கும் உடலமைப்பின் வித்தியாசங்களைக் கண்டு வெதும்புவது, பூனையின் இச்சைக்கு இணங்குவது என்பதில் இருந்து டங்காருவை பன்றிக்கறி வாங்கிவரச் சொல்லும் வரையான சோளத்தின் பயணம் இந்த நாவல்.