சுபிட்சமாய் வாழ்க
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :168
பதிப்பு :16
Published on :2017
Add to Cartஎனதன்புள்ள வாசகனே! நீயும் தரணியிலே பிறரிடம் கையேந்தி நிற்காது¸ பிறருக்குப் பின் சாய்ந்து நிற்காது கௌரவத்துடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்; இயற்கைச் சட்டத்திற்கு இணங்கி நடந்து இவ்வுலக இன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்னும் என் உள்ளம் நிறைந்த ஆசையின் காரணமாக அவற்றை எய்துவதற்கான வழி வகைகளையெல்லாம் எடுத்தியம்பி¸ ‘சுபிட்சமாய் வாழ்க!’ என்ற என் உள்ளம் கனிந்த ஆசியுடன் இதனை உன்பால் அனுப்பி வைக்கிறேன்.
இதைப் படிப்பதற்குக் கையிலெடுத்த உன் முன் இதோ சுபிட்ச மாளிகை தோற்றமளிக்கின்றது. அதனுள்ளே உன்னை அழைத்துச் செல்வதற்கான ஒழுங்கான வழிகாட்n இந்நூல் தான். அதனைப் பின்பற்றிச் செல்வாயாயின் நீ சிறிது காலத்திற்குள் சுபிட்சமாளிகையின் அரசனாக முடி சூட்டப்பட்டுவிடுவாய். அதன் பின் வையகமும் உன்னுடையது தான்¸ வான் புகழும் உன்னுடையது தான்.
-அப்துற்-றஹீம்