book

மார்க்சியமும் பெரியாரும்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொளத்தூர் மணி
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :2
Published on :2021
Add to Cart

“உழைப்பாளி மக்கள் உடல் வருத்தி உழைத்த பின்னும், குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும் பரிதவிக்கும்போது, எவ்வித வேலையும் செய்யாது பணக்காரனாகத் தொழிலாளியைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, டம்பாச்சாரித்தனமாக வாழ்வது சரியல்ல (விடுதலை, 08.10.1973). “பெரியார் பல சமயங்களில் மார்க்சியர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் ஒருமுறைகூட மார்க்சியத்தைக் குறைகூறவில்லை” என்று தம்முடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார், இந்நூலின் ஆசிரியர் கொளத்தூர் மணி அவர்கள். பெரியாரின் கொள்கைகளில் சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு ஆகியவற்றோடு பொதுவுடைமைக் கொள்கையும் இருந்தது என்ற வரிசைப்படுத்துதலோடு தொடங்கும் இந்நூலில், பெரியாரின் பொதுவுடைமைக் கருத்துகள், செயல்பாடுகள் ஆகியவை குறித்து அறியாத பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்திய மொழிகளில் வெளிவருவதற்கு முன்பே ஆங்கிலத்தில் இருந்த கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் ‘சமதர்ம அறிக்கை’ என்ற பெயரில் தமிழில் வெளியிட்டது; இங்கிலாந்தில் தொழிற்கட்சி நடத்திய மாநாட்டிலேயே போய் அக்கட்சியை விமர்சித்துப் பேசியது என்பன போன்ற செய்திகள் பலரும் அறியாதது. பாரதியார் பாட்டுப் பாடினார்,