
இசையின் அதிகார முகங்கள்
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ. முத்தையா
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194919513
Add to Cartஇசையின் அதிகார முகங்கள் என்பது எழுத்தாளர் இ. முத்தையா எழுதிய ஒரு சமூகவியல் மற்றும் கலை சார்ந்த கட்டுரை நூலாகும். இந்நூல் இசை, சமூகம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவை மிக ஆழமாக ஆராய்கிறது.
பேராசிரியர் இ.முத்தையா அவர்களின் 'இசையின் அதிகார முகங்கள்' என்னும் இந்நூல் சங்ககாலம் முதல் சமகாலம் வரையில் தமிழ் இசை குறித்து புனிதப்படுத்தப்பட்டுள்ள கருத்துகளைத் தேவையான சான்றுகளோடு கேள்விக்குட் படுத்தும் நூல். இதுவரை இசை என்பது மன்னர்களின் புகழ்பாடும் இசையாகவும் வைதீக சமயங்களுக்குரிய இசை யாகவும் ஒடுக்கப்பட்டவர்களை மறுதலிக்கும் இசையாகவும் உள்ளதை அறியாமல் கடந்துவிடும் மனோநிலையை கேள்விக்குட்படுத்தும் நூல். குறிப்பாக பாரதியாரின் இசையின் அரசியல், பெரியார், அயோத்திதாச பண்டிதர் முதலானோர் இசையை அணுகியப் பார்வையை உணர்த்துதல் இந்நூலின் சிறப்பு. திரைப்படங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் முன்னிறுத்தும் வெகுசன இசையின் அரசியலையும் இளையராஜா தன் இசை ஆளுமையால் தொடர்ந்து புறக்கணித்துவரும் ஒடுக்கப் பட்டவர்களின் இசையின் அடையாளம் முறையையியலையும் உணர்தலுக்கு இந்நூலின் வரவு கட்டாயமாகும். இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரின் சிந்தையிலும் இசை குறித்து புதியதொரு சிந்தனைப் பாய்ச்சல் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
